எதை தேடுகிறாய்?
பல வினாக்களும்,
சில விடைகளும் கொண்டு,
எதற்கான தேடல் இது?
ஏன் இந்த ஓட்டம்?
இவை அனைத்தும் எங்கே கிடைக்கும்?
வாஸ்துவம். வாழ்வில் ஓட்டம் தேவைதான், இல்லையேல் சுவாரஸ்யம் ஏது!
மனித இனமே பின்பற்றி வரும் வழக்கம் ஆகிவிட்டதல்லவா.
ஆதி காலத்தில் நெருப்பை கண்டுபிடித்ததும், இந்து சமவெளியில் நாகரிகம் தோன்றியதும், இக்கணினி கண்டுபிடித்ததும், இக்கதையை படிக்கவைப்பதும், விண்வெளியை சென்றடைந்ததும், மனிதனை செவ்வாய் கிரகத்தில் வாழவைப்பதற்கான முயற்சியும்,

மனித வாழ்வின் கேள்விகளுக்கான பதில் அல்லவா!
அவ்வாறு இருக்கையில், புறத்தின் வினா-விடை மட்டுமே கண்டுபிடிப்பு ஆகுமா? அகத்தின் கண்டுபிடிப்பும் அவசியம் அல்லவா!
அதற்காகத்தான்,
இது எதற்கான ஓட்டம் என்பதை தெளிவு கொள்ள வேண்டும்.
இல்லையெனில் அது தண்ணீரில் கண்ணீரை தேடுவது போல.
இல்லையெனில் அது தண்ணீரில் கண்ணீரை தேடுவது போல.
மனித நாகரிகத்தின் வளர்ச்சியே சமுதாயத்துடன் எப்படி ஒன்றி வாழ்வதன் தொடக்கம்தான்.
நீ தேடும் வினாக்களுக்கு விடை உன்னிடமே, அதை கண்டுபிடிக்க உதவும் கருவி நமது சுற்றம்.
அதை சொல்வதுதான் சுற்றத்துடன் ஒன்றி வாழ் என்ற வழக்கம். எது சரி-தவறு,சந்தோஷம்-துக்கம், நல்லவை-கெட்டவை, கூடும்-கூடாது என்பதையெல்லாம் சுற்றமே சொல்லும்.

சுற்றதுடன் ஒன்றி வாழ்.
உனது வினாக்களுக்கு, உன்னருள் உள்ள விடைகளை கண்டுபிடி.
தேடல் தொடங்கி விட்டதோ?
நன்று.
நூறு சதவீதம் அபரிவிதம், ஏனெனில் அகம் ஒரு பிரபஞ்சம்,
உன்னை நீ அறிய இன்னும் எத்துணை ஜென்மங்களோ!
உன்னை நீ அறிய இன்னும் எத்துணை ஜென்மங்களோ!
வெற்றி நிச்சயம். :)
Nalla Karuthu!
ReplyDelete