மேகங்கள்

எல்லாருக்கும் ஆசை.

அந்த மேகங்களை போல்
வானில் மிதக்க,
சுதந்திரமாய் சுற்ற,
காற்று போகும் திசை நோக்கி செல்ல,
மற்றவர் காண வானுயர்ந்து நிற்க,...

எது தடை இங்கே?

ஆசைகளும் எண்ணங்களும் தடையின்றி மேகங்களை போல்தான் உள்ளது. என்ன கவலை!

செயல்களில் உண்டோ?
என்ன யோசனை? இல்லை அல்லவா?

செயல்களில் காண, உன்னை சுழன்றிருக்கும் பிரச்சனைகள் கொண்ட மாய வலையில் இருந்து வெளியே வா.
கஷ்டங்கள் எல்லாம் நம் மனவலிமையை மிகுதியாக்கத்தான். வாஸ்தவம். ஆனால், அவை அனைத்தும் உள்ளது என்று தெரிந்தும், அதை நினைத்து நினைத்து துன்புறுவதில் என்ன கிடைக்க போகிறது!

அதை சரி செய்வதில் அல்லவா சுவாரஸ்யம்!
பிரச்சனைகளை விட்டு விலகி, அதை ஒரு பறவையின் பார்வையில் பார். அனைத்தும் சிறிதாய் தெரியும். அதன் தொடக்கமும் தெரியும், சரி செய்ய வழியும் புலப்படும்.

விடுகதை போல் அல்லவா வாழ்க்கை. ஒவ்வொன்றும் சரியாக ஓவியமாய் மாறும்.

அடுத்தடுத்த ஓவியங்கள் காண,
உன்னையே உணர்வாய்,
மேகங்கள் போல் உயர்வாய் !

#OutOftheBoxThinking 

Comments

Popular Posts