வாழ்வின் நிறைவு!

வாழ்வின் 
தொடக்கம் எங்கே?
முடிவு எங்கே?

பிறப்பு தொடக்கத்தையும், இறப்பு முடிவையும் குறிக்குமானால், அது தகுமோ ?
அதுவே ஒருவரின் வாழ்வை  நிர்ணயிப்பதில்லை.
அப்படியானால், ஆன்மாவிற்கான மதிப்பு ஏது?

இவ்வுலகில் வாழும் ஜீவராசிகள் அனைத்தும் எதை நோக்கி பயணிக்கிறது என்று எண்ணியதுண்டோ?
ஜனனம் கொண்டு, நடக்க கற்று, பேச பழகி, கல்வி கற்று, வாழ்வின் பாடம் கற்று,எவரிடத்தில் எவ்வாறு  பேசவேண்டும் என்று தெளிந்து, எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று தெரிந்து, அறிந்து,
செயல்பட, செயல்பட, வாழ்வின் கர்மங்களையும் தர்மங்களையும் தெரிந்து, அதை பின்பற்றி வாழ்வின் உயர்வை அடையவே வாழ்க்கை நிறைவுபெற்று, முடிவடைகிறது.

வாழ்வு முடிவு பெறுவதில்லை, முழுமை அடைகிறது.
அதை உணர முடியுமே தவிர, காண இயலாது.

அம்முடிவு சேரும் இடம், 
அனைத்தும்  சென்றடையும் இடம்,
சிவம்.
ஆதியும் சிவமே! அந்தியும் சிவமே!

இவ்விரவு, 
நீர், நிலம், காற்று, ஆகாயம், தீ - ஆகிய அனைத்திலும் 
உடுக்கை சத்தமும்,
ருத்ர தாண்டவமும்,
ஆத்ம அமைதியும்,
தியான யோகமும்,
வாழ்வின் மேன்மையும்
உணர்ந்து மெய் ஞயானம் அடைவோமே!

சிவமயம்.
சிவமே மயம்.








Comments

Post a Comment

Popular Posts