இந்நகரம் கற்றுத்தந்த பாடம் - 1
கதை என்னவென்று சொல்வதறியாது சொல்லும் நானும், இக்கதையும்!
சலித்துவிடாதீர்கள். சகித்துக்கொண்டு கடைசி வரை செல்லவும்.
இந்நகரம்.
இங்கு வரும் முன், நானும் ஒரு நாள் இங்கு வசிப்பேன் என பிடிவாதம்.
இங்கு வந்த பின், இங்கு வசிப்பதேய தலையெழுத்து என சலிப்பு.
மதராசப்பட்டினம்.
எங்கும் எதிலும் நிறைவு பெறாத இந்நகரில்,
மக்களின் எண்ணங்களும் செயல்களும் நிறையவே சொல்லாமல் சொல்கிறது.
வாழ்க்கையே சலிக்காத மக்கள் ஒரு புறம், சலிப்பே வாழ்க்கையாய் கொண்ட மக்கள் ஒரு புறம்.
அவரவர் புறங்களில் அவரவர் வாதங்கள் சரியே!
தவறென்று சொல்ல நானும் ஞானி அல்ல, நீரும் கடவுள் அல்ல.
வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்ற நமது கோட்பாடுகளும், அதை நிறைவேற்றி மனநிறைவு பெற நாம் எடுக்கும் முயற்சிகளும் . அதில் வரும் வெற்றிகளும், தோல்விகளும், அத்தோல்விகளை வெற்றிகளாக்க செய்யும் செயல்களும் - வாழும் காலத்தையே எடுத்துகொள்கிறது.
இங்கு தடைகளுக்கு பஞ்சமில்லை. கணக்கும் இல்லை.
இக்காலத்தின் சக்ரவியூகத்தினுள் அகப்பட்டவனாய் நாம் மாறி போக, அதை உடைத்தெறிய எடுக்கும் முயற்சிகள் எல்லாம் இன்னும் வியூகத்தை பலப்படுத்தி நம்மை விளையாடி பார்கிறதே தவிர,
அதை உடைத்தெறியும் மார்க்கத்தை தரவில்லை.
எனினும், மனிதனோ வெற்றி மீது கொண்ட பேராசை, தன்னால் முடியும் என்ற அகந்தை, இக்காலம் தரும் போர்களை முறியடிக்க முடியும் என்ற கர்வம் கொண்ட ஜீவன்! விடாமுயற்சி நம்மை அறியாமலே நம்முள் புதைந்தல்லவா.
இக்கால சக்ரவியூகத்தை உடைத்தெறிய நாம் கொண்ட காண்டீபமே விடாமுயற்சி தானே.
முயற்சி இல்லையேல், போருக்கு முன்னரே தோல்வி.
முயற்சியால் போரில் தோல்வி இல்லை.
அகப்பட்டால், அபிமன்யு.
உடைத்தெறிந்தால், அர்ஜுனன்.
இவ்வுலகமெனும் நாடக மேடையில், இவ்விருவரை போல,
நாமும் புகழ்மிக்க கதாபாத்திரம் ஆவோம்.

Awesome post! ☺ Keep posting
ReplyDeleteAwesome post! ☺ Keep posting
ReplyDelete